Wednesday, April 25, 2012

ஏப்ரல் 25, 2012

புதன் மறைபோதகம்: விசுவாச ஊட்டம்பெற்ற செபம் புதிய சூழல்களுக்கு பதிலளிக்க பலம் தருகிறது - திருத்தந்தை

   இப்புதனன்று இத்தாலியின் பல பகுதிகளிலி ருந்தும் உரோம் நகருக்கு வந்திருந்த திருப்பயணி களும் சுற்றுலாப் பயணிகளும் தூய பேதுரு வளா கத்தை நிறைத்திருக்க, இன்றைய பொது மறைபோத கத்திலும் கிறிஸ்தவ செபம் குறித்த தன் சிந்தனை களை அவர்களுக்கு வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பிறரன்பு பணிகளைக் கவனிப்பதற்கென்று திருச்சபையின் தொடக்க காலத்தில் இயேசுவின் சீடர்களால் ஏழுபேர் கொண்ட பொது நிலையினர் குழு உருவாக்கப்பட எடுக்கப்பட்ட தீர்மானத்தைக் குறித்து இன்று நோக்குவோம் என தன் மறைபோதகத்தைத் துவக்கினார்.
   செபத்திற்கும் பல்வேறு ஆலோசனைகளுக்கும் பின் எடுக்கப்பட்ட இத்தீர்மானம், ஏழைகளின் தேவைகள் கவனிக்கப்படுவதற்கும், அதேவேளை, இயேசுவின் சீடர்கள் இறைவார்த்தைப் பணிக்கென தங்களை முற்றிலுமாக அர்ப்பணிப்பதற்கும் உதவு வதாக இருந்தது. இத்தீர்மானத்தின் மூலம் திருத்தூதர்கள், செபம் மற்றும் பிறரன்பு பணிகளின் முக்கியத்துவத்தை ஏற்றுள்ளதைக் காண்கிறோம். இருப்பினும், அவர்கள் இறை வேண்டலுக்கும் இறைவார்த்தைப் பணிக்கும் முதன்மையான முக்கியத்துவம் கொடுத் தனர். ஆழ்ந்த தியானத்திற்கும் செயல்பாட்டிற்கும் இடையே உயிர்துடிப்புடைய ஆழ மான ஒன்றிப்பை எல்லாக் காலத்திலும் புனிதர்கள் வலியுறுத்தியுள்ளனர். விசுவாசத் தால் ஊட்டம்பெற்று இறைவார்த்தையால் ஒளியூட்டப்பட்ட செபம், நாம் அனைத்தை யும் புதிய கண்ணோட்டத்துடன் நோக்கவும், தூய ஆவியால் வழங்கப்பட்ட உள்ளுணர்வு மற்றும் ஞானத்தின் உதவியுடன் புதிய சூழல்களுக்குப் பதிலளிக்கவும் பலம் தருகிறது. நம் தினசரி வாழ்விலும் தீர்மானங் களிலும், செபம் மற்றும் இறைவார்த்தை எனும் இரு நுரையீரல்களிலிருந்து புதிய ஆன்மீக உயிர்மூச்சை நாம் பெறுவோமாக. இதன் வழி நாம், முற்றிலுமாக இறைவிருப்பத்தைப் புரிந்து கொண்டவர்களாக அதற்கு விசுவாச மாக இருந்து, புது சூழல்களையும் சவால்களையும் ஞானத்துடன் எதிர்கொள்ள இயலும்.
   இவ்வாறு தன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, இந்தியா, இந்தோனே சியா, மலேசியா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்திருந்த திருப்பயணிகளை வாழ்த்தி, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.