Wednesday, April 11, 2012

ஏப்ரல் 11, 2012

புதன் மறைபோதகம்: உயிர்ப்பின் உண்மைகளுக்கு
சாட்சியாக திருச்சபை விளங்க வேண்டும் - திருத்தந்தை

   இப்புதன் காலை 10.30 மணிக்கு வத்திக் கான் தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடி யிருந்த திருப்பயணிகளை சந்தித்து பொது மறைபோதகம் வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பைத் தொடர்ந்த நிகழ்வுகள் குறித்த தனது கருத்துக் களை எடுத்துரைத்தார்.
   அன்பு சகோதர சகோதரிகளே, துன்பம் மற்றும் இறப்பின்மீது இயேசு கண்ட வெற்றி யின் வழியாக பிறந்த உயிர்ப்பு தரும் ஆன்மீக மகிழ்வின் அடையாளத்தை நம் இன்றைய பொது மறைபோதகம் கொண்டுள்ளது. எருசலேம் மேல்மாடியில் குழுமியிருந்த சீடர் களுக்குத் தோன்றிய இயேசு, தன் மீட்பின் காயங்களை அவர்களுக்குக் காண்பித்த போது, அவர்களின் வாழ்வு மாற்றம் கண்டது. உலகம் வழங்கமுடியாத அமைதியைத் தூய ஆவியின் கொடையோடு தன் சீடர்களுக்கு வழங்கிய இயேசு, அதே அமைதியை உலகெங்கும் எடுத்துச் செல்லும்படி அவர்களை அனுப்பினார். சீடர்களின் இப்பணி புதிய உடன்படிக்கையின் மக்களாகிய திருச்சபையின் பயணத்தைத் தொடங்கி வைக் கிறது. உயிர்ப்பு கொணரும் புதிய வாழ்வின் உண்மைகளுக்கு ஒவ்வொரு காலத்திலும் சாட்சிகளாக விளங்கும்படி, புதிய உடன்படிக்கையின் மக்கள் அழைப்பு பெற்றுள் ளார்கள். இன்றும் நமதாண்டவராம் இயேசு, மகிழ்வு, அமைதி, நம்பிக்கை மற்றும் வாழ்வின் கொடைகளுடன் நம் இதயங்களுக்குள் வருகிறார். எம்மாவுஸ் பாதையில் இயேசுவைச் சந்தித்த சீடர்களைப்போல், நாமும் இயேசுவின் வார்த்தையிலும் அப்பம் பிடுகையிலும் அவரைக் கண்டுகொள்வோமாக! இந்த உயிர்ப்பு விழாக்காலத்தில், உயிர்த்த கிறிஸ்துவோடு இணைந்து நடைபோட தீர்மானிப்பதுடன், அவர் உயிர்ப்பின் வல்லமை மற்றும் அவரில் நாம் கொள்ளும் விசுவாசம் நம்மை மாற்றியமைக்க அனுமதிப்போமாக!
   இவ்வாறு தன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.