Monday, April 2, 2012

ஏப்ரல் 1, 2012

குருத்து ஞாயிறன்று திருத்தந்தை
இளையோருக்கு வழங்கிய மறையுரை

   நாசரேத்தூர் இயேசு நமக்கு யார், மெசியாவைக் குறித்தும் கடவுளைக் குறித்தும் நம் எண்ணங்கள் என்ன என்ற கேள்விகளை விசுவாசிகளுக்கு முன் வைத்து குருத்து ஞாயிறு மறையுரையை வழங்கி னார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   குருத்து ஞாயிறன்று திருச்சபையில் சிறப்பிக்கப் படும் உலக இளையோர் நாளையொட்டி, உரோம் நகரின் புனித பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த இளையோர் உட்பட முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட விசுவாசிகளுக்குத் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை, இறைவனை வரவேற்பதற்கும் அவர் வழியை இறுதிவரை பின்பற்றுவதற்கும் தீர்மா னம் எடுக்கும் நாளாக இக்குருத்து ஞாயிறை நாம் சிறப்பிப்போம் என்று கூறினார்.
   சிலுவையை மணிமுடியாக ஏற்றுக்கொண்ட நம் அரசரின் பாதையில் நடைபோட இப்புனித வாரத்தில் அழைக்கப்படுகிறீர்கள் என்று இளையோரிடம் கூறிய திருத் தந்தை, நம்முடைய உண்மையான எதிர்பார்ப்புகள், நம் ஆழ்ந்த விருப்பங்கள் என் னென்ன என்பது குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் இது என்றார்.
   இஸ்ரயேலின் அரசராக இயேசுவைக் கொண்டாடிய அதே மக்கள், பிலாத்தின் முன்னிலையில் இயேசுவைச் சிலுவையில் அறையும்படிக் கேட்டதைப் பற்றியும் சுட்டிக்காட்டிய பாப்பிறை, மெசியாவாகவும் இஸ்ரயேலின் மன்னராகவும் இயேசு தன்னை வெளிப்படுத்திய விதத்தால் ஏமாற்றமடைந்தவர்களே இவ்வாறு எதிர்மறை யானவர்களாக மாறினர் என்றார்.
   இறைவனுக்கு ஆம் என்று சொல்வதற்கும் அவர் வழியைப் பின்பற்றுவதற்கும் உறுதியான தீர்மானத்தை எடுக்கும் நாளாக இக்குருத்து ஞாயிறை சிறப்பிப்போம் என இளையோர்க்கு மீண்டும் அழைப்பு விடுத்த திருத்தந்தை, இத்தகையத் தீர்மானமே உண்மையான மகிழ்வுக்கு இட்டுச் செல்லும் என்பதையும் எடுத்துரைத்து 'ஆண்டவ ரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்' என்ற இவ்வாண்டின் இளையோர் தின மையக் கருத்தையும் சுட்டிக்காட்டினார்.