Sunday, April 29, 2012

ஏப்ரல் 29, 2012

குருத்துவ வாழ்வு என்பது கடவுளின்
உடனிருப்பில் வாழ்வதாகும் - திருத்தந்தை

   இறையழைத்தலுக்கான உலக செப நாளான ன்று தூய பேதுரு பேராலயத்தில் திருத்தந்தை 16ம் பென டிக்ட் தலைமையில் நிகழ்ந்த திருப்பலி யில், ஒன்பது திருத்தொண்டர்கள் குருக்களாக திருநிலைப்படுத்தப் பட்டனர். புதிய குருக்களுக்கும் கூடியிருந்த அனை வருக்கும் திருத்தந்தை பின்வருமாறு மறையுரை வழங்கினார்:
   குரு என்பவர் ஆயரைப் போன்று தன்னிடம் ஒப்ப டைக்கப்பட்ட மக்களை உண்மையின் மிகுதியான வாழ்வுக்கு வழிநடத்த அழைக்கப்பட்டவர். குருத்துவ வாழ்வின் மதிப்பீடு சமூகப் பணி களோடு மட்டும் தொடர்புகொண்டது அல்ல; அது கடவுளின் ஆழ்ந்த உடனிருப்பில் வாழும் வாழ்வாகும். குருவின் சிலுவை பாரம் வாழ்வில் அதிகரிக்கும்போது, அந்த உடனிருப்பு மிகவும் ஆழமாக இருக்கிறது. இயேசு அவரது மக்கள் தலைவர்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு வாழ்வை அனுபவித்தார். இருந்தாலும் தந்தையாம் கடவுளின் உதவியால், அவர் ஒரு புதிய திருச்சபையை நிறுவினார். குருவும் இயேசுவின் வாழ்க்கை அனுபவத்தை வாழ, போதிக்கும் மற்றும் குணப்படுத்தும் பணிகளுக்காக தன்னை முழுமையாக கையளிக்க அழைக்கப்படுகிறார்.

   திருப்பலியைத் தொடர்ந்து பாஸ்கா மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, "இன்றைய நற்செய்தி தனது மந்தைக்காக உயிரையே கொடுக்கும் நல்ல ஆயாராம் கிறிஸ்துவைச் சுட்டிக்காட்டுகிறது. இன்று நாம் குருத்துவ அழைத்தலுக்காகவும் செபிக்கிறோம்: அதிகமான இளம் ஆண்கள் கிறிஸ்துவின் அழைப்பைக் கேட்டு அவரை நெருக்கமாக பின்பற்றவும், தங்கள் சகோதர சகோதரிகளுக்கு பணியாற்ற தங்கள் வாழ்வைக் கையளிக்கவும் முன்வரட்டும். இன்றைய தினம் திருநிலைப்படுத்தப்பட்ட இளம் குருக்கள் மற்ற இளையோரிடமிருந்து வேறுபட்டவர்கள் அல்லர், மாறாக இறை வனின் ஆழ்ந்த ன்பால் தொடப்பட்டவர்கள். கடவுளின் அமைதி உங்கள் அனைவ ரோடும் இருப்பதாக!" என்றார்.

Wednesday, April 25, 2012

ஏப்ரல் 25, 2012

புதன் மறைபோதகம்: விசுவாச ஊட்டம்பெற்ற செபம் புதிய சூழல்களுக்கு பதிலளிக்க பலம் தருகிறது - திருத்தந்தை

   இப்புதனன்று இத்தாலியின் பல பகுதிகளிலி ருந்தும் உரோம் நகருக்கு வந்திருந்த திருப்பயணி களும் சுற்றுலாப் பயணிகளும் தூய பேதுரு வளா கத்தை நிறைத்திருக்க, இன்றைய பொது மறைபோத கத்திலும் கிறிஸ்தவ செபம் குறித்த தன் சிந்தனை களை அவர்களுக்கு வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பிறரன்பு பணிகளைக் கவனிப்பதற்கென்று திருச்சபையின் தொடக்க காலத்தில் இயேசுவின் சீடர்களால் ஏழுபேர் கொண்ட பொது நிலையினர் குழு உருவாக்கப்பட எடுக்கப்பட்ட தீர்மானத்தைக் குறித்து இன்று நோக்குவோம் என தன் மறைபோதகத்தைத் துவக்கினார்.
   செபத்திற்கும் பல்வேறு ஆலோசனைகளுக்கும் பின் எடுக்கப்பட்ட இத்தீர்மானம், ஏழைகளின் தேவைகள் கவனிக்கப்படுவதற்கும், அதேவேளை, இயேசுவின் சீடர்கள் இறைவார்த்தைப் பணிக்கென தங்களை முற்றிலுமாக அர்ப்பணிப்பதற்கும் உதவு வதாக இருந்தது. இத்தீர்மானத்தின் மூலம் திருத்தூதர்கள், செபம் மற்றும் பிறரன்பு பணிகளின் முக்கியத்துவத்தை ஏற்றுள்ளதைக் காண்கிறோம். இருப்பினும், அவர்கள் இறை வேண்டலுக்கும் இறைவார்த்தைப் பணிக்கும் முதன்மையான முக்கியத்துவம் கொடுத் தனர். ஆழ்ந்த தியானத்திற்கும் செயல்பாட்டிற்கும் இடையே உயிர்துடிப்புடைய ஆழ மான ஒன்றிப்பை எல்லாக் காலத்திலும் புனிதர்கள் வலியுறுத்தியுள்ளனர். விசுவாசத் தால் ஊட்டம்பெற்று இறைவார்த்தையால் ஒளியூட்டப்பட்ட செபம், நாம் அனைத்தை யும் புதிய கண்ணோட்டத்துடன் நோக்கவும், தூய ஆவியால் வழங்கப்பட்ட உள்ளுணர்வு மற்றும் ஞானத்தின் உதவியுடன் புதிய சூழல்களுக்குப் பதிலளிக்கவும் பலம் தருகிறது. நம் தினசரி வாழ்விலும் தீர்மானங் களிலும், செபம் மற்றும் இறைவார்த்தை எனும் இரு நுரையீரல்களிலிருந்து புதிய ஆன்மீக உயிர்மூச்சை நாம் பெறுவோமாக. இதன் வழி நாம், முற்றிலுமாக இறைவிருப்பத்தைப் புரிந்து கொண்டவர்களாக அதற்கு விசுவாச மாக இருந்து, புது சூழல்களையும் சவால்களையும் ஞானத்துடன் எதிர்கொள்ள இயலும்.
   இவ்வாறு தன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, இந்தியா, இந்தோனே சியா, மலேசியா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்திருந்த திருப்பயணிகளை வாழ்த்தி, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Sunday, April 22, 2012

ஏப்ரல் 22, 2012

தைரியம், மகிழ்ச்சியோடு நாமும் கிறிஸ்துவின்
சாட்சிகளாக திகழ முடியும் - திருத்தந்தை

   இஞ்ஞாயிறு தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த முதல் நற்கருணை பெறத் தயாரித்து வரும் இளஞ்சிறார் மற்றும் திருப்பயணிகளுடன் பாஸ்கா கால மூவேளை செபத்தை செபித்த திருத் தந்தை 16ம் பெனடிக்ட் பின்வருமாறு மறையுரை வழங்கினார். 
   உயிர்ப்பு காலத்தின் மூன்றாம் ஞாயிறான இன்று, லூக்கா நற்செய்தியில் சீடர்களின் நடுவில் உயிர்த்த இயேசு தோன்றியதைக் காண்கிறோம். அவர்கள் நம்பமுடியாதவர்களாய் அச்சமுற்று ஒரு ஆவியைக் காண்பதாக நினைத் தார்கள். ரொமனோ கார்டினி இவ்வாறு எழுதுகிறார்: "ஆண்டவர் மாறிவிட்டார். முன்பு இருந்தது போல இப்போது இல்லை. அவரது இருப்பு ... அது புரிந்துகொள்ள முடியாதது. மேலும் அது உடலாக, அவரது முழு வாழ்க்கை அனுபவத்தையும், அவர் வாழ்ந்த முறையையும், அவரது திருப்பாடுகள் மற்றும் இறப்பையும் ... உள்ளடக்கி இருந்தது. அனைத்தும் உண்மை. மாற்றம் பெற்றிருந்தாலும், எப்பொழுதும் உறுதி யான உண்மை." சிலுவையால் ஏற்பட்ட தழும்புகளை உயிர்ப்பு அழித்துவிடவில்லை என்பதால், இயேசு தனது கைகளையும் கால்களையும் திருத்தூதர்களுக்கு காண்பிக் கிறார். அவர்களை நம்பச் செய்வதற்காக, உண்பதற்கு ஏதாவது இருக்கிறதா என்று கேட்கிறார். எனவே சீடர்கள், வேகவைத்த மீன் துண்டு ஒன்றை அவருக்கு கொடுத் தார்கள். அவர் அதைப் பெற்று, அவர்கள் முன்பாக உண்டார். மீனை நெருப்பில் வாட்டியது, கடவுளுக்கும் மனிதருக்கும் இடைநிலையாளரான இயேசுவின் பாடுகளை உணர்த்துகிறது. உண்மையில், அவர் மனமிரங்கி மனித குலத்தில் தன்னை மறைத்துக் கொண்டு, மரணத்தின் பிடிக்கும் தன்னை ஓப்புக் கொடுத்தார். அவரது திருப்பாடுகள் தீயின் வேதனையை அனுபவிப்பதைப் போன்று இருந்தன" என்று புனித பெரிய கிரகோரி கூறுகிறார்.
   மிகவும் யதார்த்தமான இந்த அடையாளங்களுக்கு நன்றி! சீடர்கள் தங்களது தொடக்க சந்தேகத்தில் இருந்து விடுபட்டு, விசுவாசத்தின் கொடைக்கு திறந்தவர்கள் ஆயினர். இந்த விசுவாசம், மோசேயின் சட்டத்திலும் இறைவாக்கினர் நூல்களிலும் திருப் பாடல்களிலும் இயேசுவைப் பற்றி எழுதப்பட்டவற்றை புரிந்துகொள்ள அவர்களை அனுமதிக்கிறது. "மறைநூலைப் புரிந்துகொள்ளுமாறு, இயேசு அவர்களுடைய மனக் கண்களைத் திறந்தார். அவர் அவர்களிடம், 'மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும். பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் ... இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்' என்றார்" என வாசிக்கிறோம். நம் மீட்பர் வார்த்தையின் வழியாகவும், நற்கருணை மூலமாகவும் நம்மிடையே அவரது உண்மையான உடனிருப்பை நமக்கு உறுதிப்படுத்துகிறார். எனவே எம்மாவு சீடர்கள், அப்பத்தைப் பிட்டபோது இயேசுவைக் கண்டுகொண்டது போலவே, நற்கருணை கொண்டாட்டத்தில் நாம் ஆண்டவரை சந்திக் கிறோம். இதைக் குறித்து புனித தாமஸ் அக்குயினாஸ் விளக்கும்போது, கத்தோலிக்க விசுவாசத்தின்படி கிறிஸ்து இந்த அருட்சாதனத்தில் முழுமையாக இருக்கிறார் என்று ஒப்புக்கொள்வது மிகவும் அவசியமாகிறது ... ஏனெனில் கடவுள்தன்மை உடலேற்பை ஒருபோதும் ஒதுக்கியதில்லை.
   அன்பு நண்பர்களே, திருச்சபை பொதுவாக ஈஸ்டர் காலத்தில், சிறுவர்களுக்கு முதல் நற்கருணை வழங்குகிறது. எனவே இந்த விசுவாச கொண்டாட்டத்துக்கு நன்றாக, சிறந்த உற்சாகத்துடன், ஆனால் எளிமையாக தயாரிக்க திருப்பணியாளர்களையும், பெற்றோர்களையும், வேதியர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இயேசு உடனான தனிப்பட்ட சந்திப்பின் முக்கியத்துவத்தை உணரும்போது ... இந்த நாள் நினைவுகூரக் கூடிய தருணமாக இருக்க வேண்டும். ஆண்டவரின் வார்த்தையை கவனமாக கேட்கவும், நற்கருணைப் பலியில் தகுதியோடு பங்கேற்கவும், புதிய மனித குலத்தின் சாட்சிகளாக மாறவும் இறையன்னை நமக்கு உதவுவாராக!
   இங்கு வந்திருக்கும் ஆங்கிலம் பேசுவோர் அனைவரையும், மற்ற திருப்பயணி களையும் வாழ்த்துவதில் நான் மகிழ்கின்றேன். இன்றைய நற்செய்தியில், உயிர்த்த ஆண்டவர் அவரது பாடுகள் மற்றும் இறப்பின் பொருளில் சீடர்களின் உள்ளங்களைத் திறந்து, மனமாற்றத்தை அறிவிக்க அவர்களை அனுப்புகிறார். தைரியத்தோடும் மகிழ்ச்சியோடும் நாமும் கிறிஸ்துவின் உண்மையான சாட்சிகளாக திகழ முடியும். உங்கள் அனைவரையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக!

Wednesday, April 18, 2012

ஏப்ரல் 18, 2012

புதன் மறைபோதகம்: ஒரே கருத்துடனான ஒன்றிப்பின்
செபமே திருச்சபைக்கு அடிப்படை - திருத்தந்தை

   கடந்த திங்களன்று தனது 85வது பிறந்தநாளை கொண்டாடிய திருத்தந்தையை வாழ்த்த தூய பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த 25 ஆயிரம் திருப்பயணி களின் வாழ்த்தொலிகளின் நிறைவில் இன்றைய புதன் மறைபோதகம் வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். ல வாரங்களாக, கிறிஸ்தவ செபம் குறித்தத் தொடரை வழங்கி வரும் திருத்தந்தை, முதல் கிறிஸ்தவர்களின் துன்பங்களுக்கு நடுவே திருத்தூதர்கள் கடவுளை நோக்கி மன்றாடிய 'சிறிய பெந்தகோஸ்து' நிகழ்வு குறித்து நம் பார்வையைத் திருப்புவோம் என்று தன் பொது மறைபோதகத்தைத் துவக்கினார்.
   புனிதர்களான பேதுருவும் யோவானும் கைதுசெய்யப்பட்டு விடுதலைபெற்ற பின்னர், கிறிஸ்தவ சமூகம் அவர்களுடன் செபத்தில் இணைந்து மன்றாடியவுடன், அவர்கள் கூடியிருந்த இடம் அதிர்ந்தது. அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்களாய் கடவுளின் வார்த்தைகளைத் துணிவுடன் எடுத்துக் கூறினர் என திருத்தூதர் பணிகள் நூலின் நான்காம் அதிகாரம் வழியாக அறிய வருகின்றோம். இந்தச் செபம் நமக்கு முதல் கிறிஸ்தவ சமூகத்தின் ஒன்றிப்பைக் காட்டுகிறது. அபாயமும், அச்சுறுத்தலும், துன்பங்களும் சூழ்ந்த வேளையிலும், அவர்கள் தங்களை காத்துக்கொள்ளும் வழிவகைகளைத் தேடாமல் ஒன்றிணைந்து செபித்தனர். ஒரே கருத்துடனான ஓர் ஒன்றிப்பின் செபம். இத்தகைய செபம்தான் எப்பொழுதுமே திருச்சபைக்கு அடிப்படை. அந்த சமூகம் எதைப் பற்றியும் பயப் படவோ, பிரிந்துபோகவோ இல்லை. இதுவே நம்பிக்கை கொண்டோர் சோதிக்கப் பட்டபோது நிகழ்ந்த முதல் புதுமை.
   திருச்சபை துன்புறுத்தல்களின் மத்தியிலும் பாதுகாப்பைத் தேடாமல், இறை வார்த்தையை துணிவோடு எடுத்துரைக்கவே விரும்புகிறது. அது விசுவாசத்தைப் பறைசாற்றும் துணிவை இழக்காமல் இருக்க செபிப்பதுடன், முதலில் இயேசுவின் திருப்பாடுகளிலும், மரணத்திலும், உயிர்ப்பிலும் துன்புறுத்தல்களுக்கான வழியை விசுவாசத்தின் ஒளியில் கண்டுகொள்கிறது. முதல் கிறிஸ்தவர்களின் சமூகம் ஒரு சாதாரண அமைப்பாக இல்லாமல், கிறிஸ்துவில் வாழ்ந்த குழுமமாக இருந்தது. ந்த சமூகம் அனுபவித்த துன்புறுத்தல்கள் இறைவனின் திட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. மறைநூலை கிறிஸ்துவின் மறைபொருளின் ஒளியில் தியானித்து செபிக்கும்போது, மீட்புத் திட்டத்தின் வழியாக உணரப்பட்ட இறைவனின் தனிப்பட்ட செயல்பாட்டை இன்றைய சூழலிலும் கண்டுணர முடியும்.
   முதல் கிறிஸ்தவ சமூகத்தின் செபம், தனிப்பட்ட மற்றும் கூட்டு வரலாற்றை முன்னோக்கி வாசிக்க, அதாவது கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக இருக்க நமக்கு உதவுகிறது. நற்செய்தியை எடுத்துரைக்கும் பணியில் நமக்கு ஆற்றலைத் தந்து நம்முடன் துணை வருமாறு இறைவனை இறைஞ்சுகிறது. ஆண்டவர் நம் செபங்களை நமது சிந்தனைகளின் அடிப்படையில் இல்லாமல், அவரது அன்பு திருவுளத்தின்படி உணர்ந்து அங்கீகரிக்க, நமது இதயத்தை வெதுவெதுப்பாக்கி மனதிற்கு ஒளியூட்டும் தூய ஆவியாரின் கொடையைக் கேட்கும் வேண்டுதலை நாம் புதுப்பிக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவின் ஆவியாரால் வழிநடத்தப்படுகின்றபோது, வாழ்வின் அனைத்து சூழ்நிலைகளிலும் நாம் அமைதி, துணிவு மற்றும் மகிழ்ச்சியோடு வாழ முடியும். நமது வேதனைகளில் புனித பவுலோடு இணைந்து, துன்பம் பொறுமையைத் தரும் என்றும், பொறுமை சோதிக்கப்பட்ட நல்லொழுக்கத்தையும், நல்லொழுக்கம் நம்பிக்கையையும் தரும்; நம்பிக்கை ஏமாற்றம் தராது என்றும் அறிவோம். ஏனெனில், நமக்கு கொடை யாக அளிக்கப்பட்ட தூய ஆவியாரின் வழியாக இறைவனின் அன்பு நம் இதயங்களில் பொழியப்பட்டுள்ளது.
   இவ்வாறு தனது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Sunday, April 15, 2012

ஏப்ரல் 15, 2012

இயேசுவிலேயே நாம் வாழ்வைக் கொண்டிருக்கிறோம்
என்பதே எப்பொழுதும் நமது நம்பிக்கை - திருத்தந்தை

   இறை இரக்கத்தின் ஞாயிறான இன்று தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த மக்களுடன் பாஸ்கா மூவேளை செபத்தை செபித்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இவ்வாறு மறையுரை வழங்கினார். 
   ஒவ்வொரு ஆண்டு ஈஸ்டரை கொண்டாடும் போதும், உயிர்த்த இயேசுவை அவரது முதல் சீடர் கள் சந்தித்த அனுபவத்தை நாம் மீண்டும் வாழ்கி றோம். கிறிஸ்தவ வழிபாடு என்பது பழைய நிகழ்வு களையோ, குறிப்பிட்ட ஒரு மறைபொருளையோ உள் அனுபவத்தால் நினைவுகூர்வது மட்டுமல்ல; ஆனால் உயிர்த்த ஆண்டவரை சந்திப்பதே மிகவும் அவசியமானது.
   காலங்களுக்கு முன்பே கிறிஸ்து தந்தையாம் கடவுளோடு இருந்தார்; மேலும், உண்மையிலேயே நம் அனைவரோடும் இருக்கிறார். மறைநூல் வழியாக நம்மோடு பேசும் அவர், வாழ்வளிக்கும் அப்பமாக தன்னையே நமக்கு உடைத்து தருகிறார். இயேசுவைக் காணுதல், அவரது உடலை, மெய்யான உடலைத் தொடுதல் போன்ற சீடர்களின் அனுபவ அடையாளங்களை வாழும் நாம், உலகு சார்ந்த பிணைப்புகளில் இருந்து விடுபட வேண்டும்.
   "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று இயேசு சீடர்களை வாழ்த்தினார். இந்த பாரம்பரிய வாழ்த்து ஏதோ ஒன்றை புதியதாக உருமாற்றுகின்றது. அது இயேசு மட்டுமே தரக்கூடிய அமைதியின் பரிசாக மாறுகின்றது. ஏனெனில் அது தீமையின் மீது அவர் பெற்ற மாபெரும் வெற்றியின் பலன் ஆகும். இயேசு தனது சீடர்களுக்கு வழங்கிய அமைதி, சாந்தமும் பணிவும் கொண்ட ஆட்டுக்குட்டியாக தனது இரத்தம் முழுவதையும் சிந்தி, சிலுவையில் இறக்கும் அளவுக்கு இட்டுச் சென்ற அருளும் உண்மையும் நிறைந்த இறையன்பின் கனி ஆகும். 
   இரத்தமும் தண்ணீரும் வழிந்தோடிய கிறிஸ்துவின் விலாவைப் பற்றிய நற் செய்தியே,  அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் இந்த ஞாயிறை இறை இரக்கத் தின் ஞாயிறாக அழைக்க விரும்பியதன் காரணம். இப்போது கிறிஸ்து உயிர்த்து விட்டார். வாழும் கிறிஸ்து உயிர்ப்பின் அருட்சாதனங்களாகிய திருமுழுக்கையும் நற்கருணையையும் ஊற்றெடுக்க செய்கிறார்; அவற்றை நம்பிக்கையுடன் அணுகு வோர் நிலை வாழ்வின் பரிசைப் பெற்றுக்கொள்கின்றனர்.
   அன்பு சகோதர சகோதரிகளே, உயிர்த்த இயேசு நமக்கு அருளும் அமைதியின் கொடையை நாம் வரவேற்பதுடன், நமது இதயங்களையும் அவரது இரக்கத்தால் நிரப்புவோம். இவ்வாறு, தூய ஆவியின் ஆற்றலால், கிறிஸ்துவை மரணத்தில் இருந்து உயிர்த்தெழச் செய்த ஆவியால் நாமும் இந்த உயிர்ப்பின் கொடைகளை பிறருக்கு வழங்க முடியும். இரக்கத்தின் அன்னையாகிய மரியா, இவற்றை நமக்காக பெற்றுத் தருவாராக!
   இங்கு திருப்பயணிகளாக வந்திருக்கும் உங்கள் அனைவரையும் நான் வாழ்த்து கின்றேன். இன்றைய நற்செய்தியில், இயேசு சீடர்களுக்கு தோன்றி தோமாவின் சந்தேகத்தை நீக்குகிறார். அவரது இறை இரக்கத்தால், இயேசுவே மெசியா என்றும், அவரது பெயரிலேயே நாம் வாழ்வைக் கொண்டிருக்கிறோம் என்றும் எப்பொழுதும் நாம் நம்புவோம். உங்கள் மீதும், உங்கள் அன்புக்குரியவர்கள் மேலும் எல்லாம் வல்ல இறைவன் நிறைவான ஆசீரைப் பொழிய வேண்டுகிறேன்.

Wednesday, April 11, 2012

ஏப்ரல் 11, 2012

புதன் மறைபோதகம்: உயிர்ப்பின் உண்மைகளுக்கு
சாட்சியாக திருச்சபை விளங்க வேண்டும் - திருத்தந்தை

   இப்புதன் காலை 10.30 மணிக்கு வத்திக் கான் தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடி யிருந்த திருப்பயணிகளை சந்தித்து பொது மறைபோதகம் வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பைத் தொடர்ந்த நிகழ்வுகள் குறித்த தனது கருத்துக் களை எடுத்துரைத்தார்.
   அன்பு சகோதர சகோதரிகளே, துன்பம் மற்றும் இறப்பின்மீது இயேசு கண்ட வெற்றி யின் வழியாக பிறந்த உயிர்ப்பு தரும் ஆன்மீக மகிழ்வின் அடையாளத்தை நம் இன்றைய பொது மறைபோதகம் கொண்டுள்ளது. எருசலேம் மேல்மாடியில் குழுமியிருந்த சீடர் களுக்குத் தோன்றிய இயேசு, தன் மீட்பின் காயங்களை அவர்களுக்குக் காண்பித்த போது, அவர்களின் வாழ்வு மாற்றம் கண்டது. உலகம் வழங்கமுடியாத அமைதியைத் தூய ஆவியின் கொடையோடு தன் சீடர்களுக்கு வழங்கிய இயேசு, அதே அமைதியை உலகெங்கும் எடுத்துச் செல்லும்படி அவர்களை அனுப்பினார். சீடர்களின் இப்பணி புதிய உடன்படிக்கையின் மக்களாகிய திருச்சபையின் பயணத்தைத் தொடங்கி வைக் கிறது. உயிர்ப்பு கொணரும் புதிய வாழ்வின் உண்மைகளுக்கு ஒவ்வொரு காலத்திலும் சாட்சிகளாக விளங்கும்படி, புதிய உடன்படிக்கையின் மக்கள் அழைப்பு பெற்றுள் ளார்கள். இன்றும் நமதாண்டவராம் இயேசு, மகிழ்வு, அமைதி, நம்பிக்கை மற்றும் வாழ்வின் கொடைகளுடன் நம் இதயங்களுக்குள் வருகிறார். எம்மாவுஸ் பாதையில் இயேசுவைச் சந்தித்த சீடர்களைப்போல், நாமும் இயேசுவின் வார்த்தையிலும் அப்பம் பிடுகையிலும் அவரைக் கண்டுகொள்வோமாக! இந்த உயிர்ப்பு விழாக்காலத்தில், உயிர்த்த கிறிஸ்துவோடு இணைந்து நடைபோட தீர்மானிப்பதுடன், அவர் உயிர்ப்பின் வல்லமை மற்றும் அவரில் நாம் கொள்ளும் விசுவாசம் நம்மை மாற்றியமைக்க அனுமதிப்போமாக!
   இவ்வாறு தன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Monday, April 9, 2012

ஏப்ரல் 9, 2012

உயிர்த்த ஆண்டவரின் பிரசன்னத்தை உணர அன்னை
மரியாவின் பரிந்துரையை நாடுவோம் - திருத்தந்தை

   இயேசுவின் உயிர்ப்பு ஞாயிறுக்கு அடுத்த இத் திங்களன்று கான்டல்போ கோட்டையில் பாஸ்கா மூவேளை செப உரை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பின்வருமாறு கூறினார். 
   உயிர்ப்புத் திங்கள், பல நாடுகளில் ஓய்வு மற்றும் பொழுது போக்கு நாளாக அமைந்துள்ளது, மக்கள் நகரத் தெருக்களில் ஓய்வாக நடந்தும், நண்பர்க ளோடும் குடும்பங்களோடும் நேரத்தைச் செலவழித் தும் இவ்விடுமுறை நாளைக் கொண்டாடுகின்றனர், ஆயினும், நம் விசுவாசத்தின் பேருண்மையான ஆண்டவரின் உயிர்ப்பே இந்த விடு முறைக்கு உண்மையான காரணம்.
   நற்செய்தி எழுத்தாளர்கள், இயேசுவின் உயிர்ப்பை விவரிக்கவில்லை. இந்த உயிர்ப்பு நிகழ்வு, நம் அறிவுக்கு எட்டாத மறைபொருளாக, நம் கண்களால் தாங்க முடியாத ஒளியாக இருக்கின்றது. புனித மத்தேயு இந்நிகழ்வை பெரிய நிலநடுக்கம் உருவானதாகவும், மின்னல் போன்ற ஒளிநிறைந்த ஆண்டவரின் தூதர் கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார் எனவும் விவரிக்கிறார்.
   பெண்கள் வானதூதர்களிடமிருந்து உயிர்ப்பு பற்றிய அறிவிப்பைப் பெற்ற போது, அச்சமும் பெருமகிழ்ச்சியும் நிறைந்தவர்களாய், சீடர்களிடம் அறிவிக்க விரைந்தனர். அந்த நேரத்தில் அவர்களும் இயேசுவைச் சந்தித்து அவரது காலடிகளில் பணிந்து அவரை வணங்கினர். இயேசுவும் அவர்களிடம், "அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்" என்றார்.
   பெண்கள் நம் ஆண்டவரோடு கொண்டிருந்த சிறப்பான பிணைப்பு அனுபவம், கிறிஸ்தவ சமூகத்தின் நடைமுறை வாழ்வுக்கு முக்கியமானது. அக்காலத்தில் இஸ்ரே லில் பெண்களின் சாட்சியத்திற்கு அதிகாரப்பூர்வ சட்டரீதியான மதிப்பு இல்லை யெனினும், பெண்கள் நம் ஆண்டவரோடு சிறப்பான பிணைப்பை அனுபவித்தார்கள்.
   உயிர்த்த இயேசு அளித்த காட்சிகளிலும், அவரின் திருப்பாடுகள் மற்றும் மரணம் பற்றிய நிகழ்வுகளிலும் பெண்களின் பங்கு முக்கியமானதாக இருந்ததாக நற்செய்தி யில் நாம் வாசிக்கிறோம். நம்பிக்கை மற்றும் அமைதியின் ஊற்றாகிய உயிர்த்த ஆண்டவரின் உயிருள்ள பிரசன்னத்தை நாமும் அனுபவிக்க அன்னை மரியாவின் பரிந்துரையை நாடுவோம்.
   இவ்வாறு உரை வழங்கிய திருத்தந்தை, பின்னர் பல மொழிகளில் பயணிகளை வாழ்த்தி, அவர்களுக்கு தனது ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

Sunday, April 8, 2012

ஏப்ரல் 8, 2012

ஊருக்கும் உலகுக்கும்(Urbi et Orbi)
திருத்தந்தையின் ஈஸ்டர் செய்தி

உரோம் நகரிலும் உலகெங்கும் உள்ள என் அன்பு சகோதர சகோதரிகளே!
   எனது நம்பிக்கையாம் கிறிஸ்து உயிர்த்துவிட்டார். திருச்சபையின் வெற்றிநிறை குரல் உங்களனைவ ரையும், மகதலா மரியாவின் உதடுகளிலிருந்து வரும் பழம்பெரும் பக்தி பாடலின் வார்த்தைகள் வழி வந்தடைவதாக. மகதலா மரியாவே, உயிர்ப்பு நாள் காலையில் இயேசுவை முதலில் சந்தித்தவர். அவரே ஏனைய சீடர்களை நோக்கி ஓடிச்சென்று, 'ஆண்ட வரைக் கண்டேன்' என்று அறிவித்தார் (யோவான் 20:18). தவக்காலம் எனும் பாலைவனத்திலும், பாடுகளின் துன்பம் நிறை நாட்களிலும் பயணம் செய்துள்ள நாமும், இன்று வெற்றியின் குரலை எழுப்புவோம், 'அவர் உயிர்த்துவிட்டார். அவர் உண்மையில் உயிர்த்து விட்டார்'.
   ஒவ்வொரு கிறிஸ்தவரும் மகதலா மரியாவின் அனுபவத்தை மீண்டும் வாழ்கிறார். இது நம் வாழ்வை மாற்றியமைக்கும் ஒரு சந்திப்பை உள்ளடக்கியது. இந்த சந்திப்பானது, இறைவனின் நன்மைத்தனத்தையும் உண்மையையும் நாம் அனுபவிக்க அனுமதிக்கும் ஒரு தனிச்சிறப்பு மிக்க நபருடனானது. அவர் நம்மைத் தீமையிலிருந்து மேலோட்டமாக அல்ல, மாறாக உள்ளியல்பாக விடுதலை வழங்கி, முற்றிலுமாக குணப்படுத்தி, நம் மாண்பை மீண்டும் பெற்றுத் தருகிறார். இதனாலேயே மகதலா மரியா இயேசுவை 'எனது நம்பிக்கை' என அழைக்கிறார். இயேசுவே அவரின் புதுப்பிறப்புக்கு அனுமதியளித்தார், அவருக்குப் புது வருங்காலத்தை வழங்கினார், அது நன்மைத்தனமும், தீமையிலிருந்து விடுதலையும் கொண்ட வாழ்வு. 'கிறிஸ்துவே என
து நம்பிக்கை' என்ற சொற்கள், நன்மையை விரும்பும் என் ஏக்கங்கள் அனைத்தும் அவரில் நிறைவடையும் என்ற வாய்ப்பை உருவாக்குகிறது. அவரோடு நான், நன்மைத்தனம் கொண்ட முழுமையான, முடிவற்ற ஒரு வாழ்விற்கான நம்பிக்கையைக் கொள்ளமுடியும். ஏனெனில், நம் மனிதத்தன்மையைப் பகிர்ந்து கொண்டு கடவுளே நம் அருகில் வந்துள்ளார்.
   இயேசு மக்கள் தலைவர்களால் ஒதுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, மரணத் தீர்ப்பிடப்பட்டு சிலுவையில் அறையுண்டதை, ஏனையச் சீடர்களைப் போல், மகதலா மரியாவும் கண்டார். மனிதரின் நன்மைத்தனங்கள் தீய எண்ணங்களுக்கு அடிமைப்படுத்தப்படுவதையும், உண்மை பொய்மையால் மேற்கொள்ளப்படுவதையும், கருணை என்பது பழிவாங்கலால் மீறப்படுவதையும் காண்பது தாங்க முடியாத ஒன்று. இயேசுவின் இறப்போடு, அவரில் நம்பிக்கைக் கொண்டிருந்த அனைவரின் நம்பிக்கை களும் தோல்வியுற்றதுபோல் தோன்றியது. ஆனால் அந்த விசுவாசம் முற்றிலுமாகத் தோல்வியுறவில்லை, குறிப்பாக இயேசுவின் அன்னையாம் கன்னி மரியாவின் இத யத்தில் அந்த நெருப்பு, இரவின் இருளிலும் எரிந்தது. இந்த உலகில், நம்பிக்கையானது தீமையின் கொடுமைகளை எதிர்கொள்ளாமல் இருக்க முடியாது. இது மரணச்சுவரால் மட்டும் தடைச் செய்யப்படவில்லை, மாறாக அதற்கும் மேலாக, பொறாமை, கர்வம், பொய்மைத்தன்மை மற்றும் வன்முறை எனும் முட்கம்பி வேலிகளால் சூழப்பட்டுள்ளது. வாழ்வெனும் அரசின் பாதையைத் திறப்பதற்காக,
இயேசுவும் இந்தக் கொடுமையான மரண வேதனையுடைய வேலிகளிடையே நடந்துச் சென்றார். ஒரு சிறிது நேரம் இயேசு தோல்வி அடைந்ததைப்போல் தோன்றியது. இருள் உலகை சூழ்ந்தது, இறைவனின் மௌனம் முழுமையானதாகவும், நம்பிக்கை என்பது அர்த்தமற்ற வார்த்தையாகவும் தோன்றியது.
   இதோ, ஓய்வு நாளுக்கு மறுநாள் காலையில் கல்லறை காலியாக இருந்தது. இயேசு தன்னை மகதலா மரியாவுக்கும், ஏனைய பெண்களுக்கும், தன் சீடர்களுக்கும் வெளிப் படுத்துகிறார். விசுவாசம் புதிதாய் பிறந்தது, மேலும் உயிரூட்டம் கொண்டதாய், எப்போதையும் விட சக்தி கொண்டதாய், வெற்றிக்கொள்ள முடியாதாய் இப்போது மாறியது. ஏனெனில் இது உறுதியான அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. வாழ்வோடு இணைந்த மரணம் மகிழ்வடைந்தது. மோதல் வியத்தகு முறையில் முடிவுக்கு வந்தது. வாழ்வின் வெற்றி வீரர் கொல்லப்பட்டும், இப்போது அரசராக வாழ்கிறார். உயிர்ப்பின் அடையாளங்கள், மரணத்தின் மீதான வாழ்வின், பகைமையின் மீதான அன்பின், மற்றும் பழிவாங்கலின் மீதான இரக்கத்தின் வெற்றிக்கும் சான்று பகர்கின்றன. உயிருள்ளவரை உள்ளடக்கியது கல்லறை. கிறிஸ்து உயிர்த்தபோது அவரின் மகிமையைக் கண்டேன். வானதூதர்கள் சாட்சி பகர்ந்தபோது இயேசுவின் உடையும் கல்லறைத் துணிகளும் அங்கேயே இருந்தன.
   அன்பு சகோதர சகோதரிகளே! இயேசு உயிர்த்தெழுந்துள்ளார் எனில், அதில் மட்டுமே, உண்மையில் புதியது ஒன்று நிகழ்கிறது. அது மனித நிலைகளையும் இவ்வுலகையும் மாற்றக்கூடியது. அவ்வாறெனில் இயேசு என்பவரில் நாம் முழுமையான நம்பிக்கை வைக்கமுடியும். நம் நம்பிக்கையை அவரின் வார்த்தைகளில் மட்டுமல்ல, அவரிலேயே வைக்கலாம். ஏனெனில், உயிர்த்த இயேசு, கடந்தகாலத்திற்கு உரியவர் அல்ல, நிகழ்காலத்திற்கு உரியவர், அவர் உயிரோடு இருக்கிறார். நம்பிக்கையாகவும் ஆறுத லாகவும் உள்ளவர் கிறிஸ்து, அதிலும் சிறப்பாக, தங்கள் விசுவாசத்திற்காக பாகு பாட்டையும் சித்ரவதையையும் அனுபவித்து துன்புறும் கிறிஸ்தவ சமூகங்களுக்கு. அவர் தன் திருச்சபை வழியாக நம்பிக்கை எனும் சக்தி யாக பிரசன்னமாகியிருக்கிறார். இத்திரு
ச்சபை அநீதி, துன்பங்கள் என்ற அனைத்து மனித நிலைகளின்போதும் மனித குலத்திற்கு நெருக்கமாக உள்ளது.
   உயிர்த்த இயேசு மத்தியக் கிழக்கு பகுதிக்கு நம்பிக்கையை அருளி, அங்குள்ள அனைத்து இன, கலாச்சார மற்றும் மத குழுக்கள் ஒன்றிணைந்து, பொதுநல மேம்பாட் டிற்கும், மனித உரிமைகள் மதிக்கப்படுவதற்கும் உழைக்க ஊக்கமளிப்பாராக! குறிப்பாக, சிரியாவில், இரத்தம் சிந்தல்கள் நிறுத்தப்பட்டு, அனைத்துலக சமுதாயம் விண்ணப் பிப்பதுபோல் மதிப்பு, பேச்சுவார்த்தை மற்றும் ஒப்புரவின் பாதைக்கான உடனடி அர்ப்பணம் இடபெறுவதாக. மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் அந்நாட்டின் எண்ணற்ற அகதிகள், தங்களின் துன்பங்கள் அகற்றப்படுவதற்கு தேவையான ஒருமைப் பாடு மற்றும் ஏற்புடைமையைக் கண்டுகொள்வார்களாக. பாஸ்கா வெற்றி ஈராக் மக்களின் நிலையான தன்மைக்கும் வளர்ச்சிக்குமான பாதையைத் தொடர்வதில் அனைத்து முயற்சிகளையும் கைக்கொள்ள ஊக்கமளிப்பதாக! புனித பூமியில் இஸ்ர யேலர்களும் பாலஸ்தீனியர்களும் புதிய அமைதி முயற்சிகளைத் துணிவுடன் மேற் கொள்வார்களாக.
   மரணம் மற்றும் தீமையின் மீது வெற்றி கண்ட நமதாண்டவர், ஆப்ரிக்கக் கண்டத்தின் கிறிஸ்தவ சமூகங்களை உறுதிப்படுத்துவாராக! அவர்கள் தங்கள் துன்பங்களை எதிர் கொள்ளும்போது நம்பிக்கை வழங்குவாராக! அம்மக்களிடையே வளர்ச்சியின் கருவி களாகவும் அமைதி நடவடிக்கையாளர்களாகவும் செயல்பட அவர்களை உருவாக்குவா ராக! ஆப்ரிக்க கொம்பு நாடுகளில் துன்புறும் மக்களூக்கு உயிர்த்த இயேசு ஆறுதலை அளித்து அவர்களுக்கு ஒப்புரவை வழங்குவாராக! ஆப்ரிக்காவின் பெரும் ஏரி நாடுகளில், சூடானிலும் தென்சூடானிலும் வாழும் மக்களுக்கு மன்னிப்பின் சக்தியை வழங்குவாராக! தற்போது அரசியல் நெருக்கடியை அனுபவிக்கும் மாலி நாட்டில், மகிமை நிறை கிறிஸ்து, அமைதியையும் நிலையான தன்மையையும் வழங்குவாராக! அண்மைக் காலங்களில் கொடுமையான பயங்கரவாத தாக்குதல்களை அனுபவித்த நைஜீரியாவில், உயிர்ப்பின் மகிழ்வானது, தேவையான சக்தியை வழங்கி, புதிய சமூகத்தைக் கட்டி யெழுப்ப, அதாவது குடிமக்களின் மதச் சுதந்திரத்தை மதிக்கும் மற்றும் அமைதி நிறைந்த சமூகத்தைக் கட்டியெழுப்ப உதவுவதாக!
அனைவருக்கும் உயிர்ப்பு பெருவிழா வாழ்த்துக்கள்!

Saturday, April 7, 2012

ஏப்ரல் 6, 2012

துன்பங்களில் வாடும் குடும்பங்களுக்கு சிலுவையில்
அறையுண்ட இயேசு உதவி செய்கிறார் - திருத்தந்தை

   புனித வெள்ளியன்று இரவு உரோம் நகரின் கொலோசியம் திறந்த வெளியரங்கில் நடைபெற்ற சிலுவைப்பாதையை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் முன்னின்று நடத்தினார். குடும்பங்கள் என்ற மையப் பொருளில் அமைந்த இவ்வாண்டின் சிலுவைப்பாதை சிந்தனைகளை முதல் முறையாக, 'புதிய குடும்பங் கள்' என்ற இயக்கத்தை தோற்றுவித்த டானிலோ சான்சூச்சி - அன்னா மரியா என்ற இத்தாலியத் தம்பதியர் உருவாக்கியிருந்தனர். சிலுவைப்பாதை யின் இறுதியில் திருத்தந்தை பின்வருமாறு உரை வழங்கினார்.
   பிரச்சனைகளையும், துன்பங்களையும் சந்திக்கும் குடும்பங்களுக்கு சிலுவையில் அறையுண்ட இயேசு உதவி செய்கிறார். உறவுகளில் உருவாகும் முறிவுகள், குழந் தைகளின் எதிர்காலம் குறித்த கவலை, குடும்பங்களில் நோயுற்றோர் என்ற பல கவலைகளில் சூழப்படும் குடும்பங்கள், கடந்த சில ஆண்டுகளாக பொருளாதாரச் சரிவு, நிலையான பணி வாய்ப்புகள் இல்லாத நிலை என்ற கூடுதல் பிரச்சனைகளையும் சந்தித்து வருகின்றன. நம்மைச் சூழும் பிரச்சனைகளில் நாம் தனித்து விடப்படுவ தில்லை; மாறாக, சிலுவையில் அறையப்பட்ட இயேசு நம்முடன் துணையாக வரு கிறார். அவர் துன்பங்களைத் தாங்கிய விதம் நமக்கு மன உறுதியை அளிக்கிறது.

Friday, April 6, 2012

ஏப்ரல் 5, 2012

மனித உறவுகள் கிடைக்காத நிலையில் விண்ணகத்
தந்தையின் உதவியை இயேசு நாடினார் - திருத்தந்தை

   புனித வியாழனன்று மாலையில் உரோம் நகரின் புனித ஜான் லாத்தரன் பசிலிக்காப் பேராலயத்தில் இறைவனின் இரவு உணவு திருப்பலியை நிறை வேற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பின்வரு மாறு மறையுரை வழங்கினார்.
   இயேசு திருநற்கருணையை நிறுவினார் என்ற நிகழ்வு புனித வியாழக்கிழமை இரவின் மையமாக, மகுடமாக உள்ள மறைபொருள் என்றாலும், இந்த இரவை இருளின், போராட்டத்தின் இரவாகவும் நாம் சிந்திக்க வேண்டும். இருள், இரவு ஆகியவை உறவுகள் அற்ற, தொடர்புகள் அற்ற ஒரு நிலையை வெளிப்படுத்தும் அடையாளங்கள். ஒளியில் வாழமுடியாத தீய சக்திகள் இருளில் மட்டுமே வாழமுடியும். ஒளியான இறைமகன் கிறிஸ்து இருளை வெல்வ தற்காக அந்த இரவுக்குள் நுழைந்தார்.
   கிறிஸ்து கெத்சமனி தோட்டத்தில் மேற்கொண்ட போராட்டங்களில் நண்பர்களின் துணை அவருக்குக் கிடைக்காமல் போயிற்று. மனித உறவுகள் எதுவும் தனக்குக் கிடைக்காத நிலையில் இறைமகன் இயேசு விண்ணகத் தந்தையின் துணையை நாடினார். தன் போராட்டத்தின்போது இயேசு பயன்படுத்திய 'அப்பா' என்ற வார்த்தை 'தந்தை' என்ற பொதுப்படையான வார்த்தை அல்ல. மாறாக, ஒரு சிறு குழந்தை உரிமையோடு, பாசத்தோடு அழைக்கும் 'அப்பா' என்ற சொல். இந்தச் சொல்லால் கடவுளை அழைக்க இஸ்ரயேல் மக்கள் பயந்தனர்.
   "அப்பா, தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்" (மாற்கு 14:36) என்ற இறைவார்த்தை, ஒரு மனிதன் என்ற முறையில் இயேசு தன் துன்பத்தைக் கண்டு பயந்தாலும், இறைவனின் திருவுளத்தை நிறை வேற்றுவதிலேயே கருத்தாய் இருந்தார் என்பதை வலியுறுத்திக் கூறுகிறது. இறைவ னின் விருப்பத்திற்கு எதிராக, இறைவனுக்கே எதிராக மனிதர்கள் தங்களை முன் னிறுத்தும்போது, உண்மைக்கு எதிராகவும் செயல்படுகின்றனர்.
   மனித வரலாற்றில் இந்த எதிர்ப்பு அடிக்கடி நிகழ்ந்துள்ளதால், கடவுள், உண்மை, வாழ்வு ஆகிய உயரிய விழுமியங்களுக்கு எதிராக மனித குலத்தின் போராட்டம் இன்றும் தொடர்கிறது. சொந்த விருப்பம், இறைவனின் விருப்பம் என்ற போராட் டத்தில் இயேசு காட்டிய பணிவும், கீழ்ப்படிதலுமே உண்மையான விடுதலைக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும். அந்த பணிவை நாம் ஒவ்வொருவரும் பெறுவ தற்கு இறைவரம் வேண்டுவோம்.
   இவ்வாறு மறையுரை வழங்கிய திருத்தந்தை, இத்திருப்பலியில் உரோம் மறை மாவாட்டத்தைச் சேர்ந்த பன்னிரு குருக்களின் பாதங்களை
க் கழுவினார். இந்த திருப்பலியின்போது திரட்டப்பட்ட காணிக்கைத் தொகை அனைத்தும் சிரியாவில் துன்புறும் மக்களுக்கு அனுப்பப்படும் என்று வத்திக்கான் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Thursday, April 5, 2012

ஏப்ரல் 5, 2012

திருச்சபையின் புதுப்பித்தலுக்கு பணிவின்மையின்
பாதை ஒருபோதும் உதவாது - திருத்தந்தை

   புனித வியாழன் காலையில், கர்தினால்கள், ஆயர்கள் குருக்கள் என, 1,600க்கு மேற்பட்டோரும், ஆயிரக்கணக் கான பொதுநிலை விசுவாசிகளும் கலந்து கொண்ட திரு எண்ணெய் அர்ச்சிப்புத் திருப்பலியை தூய பேதுரு பசி லிக்கா பேராலயத்தில் நிறைவேற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பின்வருமாறு மறையுரை ஆற்றினார்.
   குருகுலத்தார் அனைவரும் தங்களது குருத்துவத் திரு நிலைப்பாட்டின் உண்மையான அர்த்தம் பற்றிச் சிந்திப் பதற்கு இந்நாளைப் பயன்படுத்த வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஓர் அருட்பணியாளர் ஒருபோதும் தனக் குச் சொந்தமானவர் அல்ல, மாறாக, சிலுவை மரணம் வரை வாழ்ந்து காட்டிய கிறிஸ்துவின் பணிவு உள்ளிட்ட அவரது வாழ்வின் ஒவ்வொரு நிலைக்கும் ஒத்துப்போகும் விதத்தில் அருட்பணியாளர் எப்போதும் இயேசுவுக்கு உரியவராய் இருப்பதன் வழியைத் தேடு கிறார், மேலும், பணிவின்மையின் பாதை அது திருச்சபையைப் புதுப்பிக்காது.
   நம் ஆண்டவர் இயேசுவுடன் மென்மேலும் ஒன்றித்திருக்கவும், அவருக்கு நெருக் கமுடையவர்களாக வாழவும் உறுதி பூண்டுள்ளோமா? இதற்கு ஒருவர் தனக்குரி யதை, தன்னிறைவு வீண்பெருமையை உதறித்தள்ள வேண்டியிருக்கிறது, இதில் நீங்களும் நானும், நமது வாழ்வை நமக்குரியதாக்காமல், அடுத்தவருக்குரியதாய், கிறிஸ்துவுக்குரியதாய் ஆக்க வேண்டியிருக்கின்றது. இதனை இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமெனில், கிறிஸ்துவுக்கு உகந்தவராய் இருப்பது, பணிவிடை பெறுப வராக அல்ல, பணிவிடை செய்பவராக இருப்பதிலும், எடுப்பவராக அல்ல, கொடுப்பவ ராக இருப்பதிலும் உள்ளது.
   குருத்துவத்தின் தன்மை இதுவென்றால், இன்றையத் திருச்சபை திடீர் திருப்ப நிலைமையை அடிக்கடி எதிர்கொள்ளும் போது குருக்களின் பதில் எத்தகையதாக இருக்க வேண்டும்? பெண்களின் குருத்துவத் திருநிலைப்பாடு உள்ளிட்ட திருச்சபை யின் அதிகாரப்பூர்வப் போதனைகளுக்கு எதிராகப் பணிவின்மை அறிக்கை ஒன்றை ஒரு ஐரோப்பிய நாட்டிலிருந்து (ஆஸ்ட்ரியாவின் 250) குருக்கள் குழு ஒன்று அண்மையில் வெளியிட்டது. பெண்களின் குருத்துவத் திருநிலைப்பாடு குறித்த விவகாரம் பற்றி அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் வெளியிட்ட அறிக்கையில், திருச்சபை, நம் ஆண்டவரிடமிருந்து எந்த அதிகாரத்தையும் பெறவில்லை. இந்த அறிக்கையை வெளியிட்டவர்கள் திருச்சபையின் மீது கொண்டுள்ள அக்கறையால் ஒருவேளை, தூண்டப்பட்டிருக்கலாம், திருச்சபையை காலத்துக்கு ஏற்ற விதத்தில் அமைப்பதற்கும், புதி்ய பாதைகளைத் திறந்துவிடுவதற்கும் இத்தகைய நடவடிக்கை கள் உதவும் என நம்பியிருக்கலாம்.
   ஆனால், இதைச் செய்வதற்கு இந்தப் பணிவின்மை அறிக்கை உண்மையான பாதையா? உண்மையான புதுப்பித்தல் என்பது, கிறிஸ்துவோடும் இறைவனின் விருப்பத்துக்கும் ஒத்து போவதாய் இருக்கும் வாழ்க்கையில் அடித்தளத்தைக் கொண்டதாய் இருக்க வேண்டும். கிறிஸ்துவும் மனித மறுதலிப்புக்களில் உள்ள தவறுகளைத் திருத்தும் வழிகளைத் தேடினார், ஆனால் இறைவனின் வார்த்தை களையும், அவரது விருப்பத்தையும் மறைக்கும் பழக்கவழக்கங்களை மட்டுமே அவர் திருத்த முயற்சித்தார். இறைவனுக்குத் தாழ்மையுடன் பணிந்து நடந்து அவரது திருச்சபையின் போதனைகளைப் பின்பற்றுவது, மரபுகளைப் பாதுகாப்பதற்கு சாக்குப் போக்குகள் ஆகாது.
   உண்மையான புதுப்பித்தல் எப்படி இருக்கிறது என்பதை, இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்துக்குப்பின் வந்த காலம் காட்டுகிறது, இதனைப் பல புதிய இயக்கங் கள் மற்றும் வாழ்வு முறைகளில் காண முடிகின்றது. இவை தீவிரப் பணிவாலும், விசுவாசத்தின் மகிழ்ச்சியாலும், உயிரோட்டமான நம்பிக்கையாலும், அன்பின் சக்தி யாலும் நிறைந்துள்ளன. சிறப்பான விதத்தில் திருச்சபைக்குப் பணிசெய்து அதனைப் புதுப்பிப்பதற்கும் மனித சமுதாயத்துக்குத் திருப்பணி செய்வதற்கும் எல்லாக் குருக் களும், கிறிஸ்துவையும் புனிதர்களையும் தொடர்ந்து பின்பற்றுங்கள். பெருமளவான எண்ணிக்கையிலும் வெளிப்படையான வெற்றிகளிலும் இறைவன் கருத்தாய் இல்லை. மாறாக, கடுகுவிதை போன்ற தாழ்மையான அடையாளங்களில் அவரது வெற்றிகள் இருக்கின்றன.
   போதகர்கள் என்ற உங்களது பணியை ஆயர்களும் குருக்களும் நினைவுபடுத்தி, நமது நவீன சமுதாயத்தில் வளர்ந்து வரும் சமய அறிவற்றதன்மைக்கு எதிராகச் செயல்பட வருகின்ற விசுவாச ஆண்டைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நாம் நமது தனிப்பட்ட கொள்கைகளையும் கருத்துக்களையும் அல்ல, ஆனால் நாம் திருச்சபையின் விசுவாசத்தைப் போதிக்கிறோம், இப்போதனைகளின் உண்மையான வழிகாட்டிகள் திருமறைநூலில் இருப்பது மட்டுமல்ல, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத் தொகுப்புகள், கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக் கல்வி ஏடு, அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் எழுத்துக்கள் ஆகிய வற்றிலும் உள்ளன. இந்தப் போதனைகள் போதிப்பவர்களின் வாழ்க்கையில் காணக் கூடிய விதத்தில் வாழ்ந்து காட்டப்பட வேண்டும்.