Sunday, December 9, 2012

டிசம்பர் 9, 2012

இயேசுவை வரவேற்க யோவானின் குரலுக்கு
செவிசாய்ப்பதே நமது நோக்கம் - திருத்தந்தை

   புனித பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இந்த ஞாயிறு வழங்கப்பட்டுள்ள லூக்கா நற்செய்தியை மையப்படுத்தி தன் கருத்துகளை எடுத் துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   இந்த திருவருகைக்காலத்தின் திருவழிபாட்டில் கன்னி மரியா, திருமுழுக்கு யோவான் ஆகிய இருவ ரும் மெசியாவின் வருகைக்காக தயார் செய்கிறார்கள். அனைத்து நற்செய்திகளுமே இயேசுவின் பணி வாழ் வின் தொடக்கத்தில் திருமுழுக்கு யோவானை அவரது முன்னோடியாக காட்டுகின் றன. புனித லூக்கா இந்த இருவருக்கும், அவர்களது பணிக்கும் இடையே உள்ள தொடர்பையும் விளக்குகிறார். குருத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர்களான செக்கரியா மற்றும் எலிசபெத்தின் மகனான யோவான், இறைவாக்கினர்களில் இறுதியானவராக மட்டுமின்றி, பழைய உடன்படிக்கையின் குருத்துவத்தை அடையாளப்படுத்துபவராக வும் இருப்பதால், இயேசுவால் தொடங்கப்பட்ட புதிய உடன்படிக்கையின் வழிபாட் டுக்கு மக்களைத் தயார் செய்கிறார். லூக்கா திருமுழுக்கு யோவானின் வாழ்க்கை வர லாற்று சூழ்நிலையையும் விவரிக்கிறார்: 'திபேரியு சீசர் ஆட்சி செய்துவந்த பதினைந் தாம் ஆண்டில், பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராக இருந்தார் ... அன்னாவும் கயபாவும் தலைமைக் குருக்களாய் இருந்தனர்.' (லூக்கா 3:1-2) அக்காலத்தவர்களால் கவனிப்படாத நிலையிலும் உண்மையான மாபெரும் நிகழ்வாகிய கிறிஸ்துவின் பிறப்பு, இத்தகைய வரலாற்று கட்டமைப்பிற்குள் இருந்தது.
   "ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மை யாக்குங்கள்" (லூக்கா 3:4) என்று பாலைநிலத்தில் முழங்கும் குரலாக திருமுழுக்கு யோவான் குறிப்பிடப்படுகிறார். அந்த குரல் வார்த்தையை அறிவிக்கிறது, ஆனால் இங்கு பாலைநிலத்தில் வாழ்ந்து வந்த செக்கரியாவின் மகன் யோவான், கடவுளின் வாக்கைப் பெற்றார். எனவே, கிறிஸ்துவை தொடர்புடைய பணியில் அவருக்கு முக் கிய பங்கு உள்ளது. புனித அகுஸ்தீன் இவ்வாறு கூறுகிறார்: யோவான் கடந்து போகும் குரலாக இருந்தார், இயேசுவோ தொடக்கம் முதலே இருந்த நிலையான வாக்காக இருக்கிறார். குரலில் இருந்து வார்த்தையை (வாக்கை) எடுத்துவிட்டால் என்ன மிஞ் சும்? ஒரு மங்கலான ஒலிதான். வார்த்தை இல்லாத குரலும் செவிகளை அடையும், ஆனால் உள்ளத்தை கட்டியெழுப்பாது." நம்மை மீட்கும் வார்த்தையாகிய இயேசுவுக்கு இடம் கொடுத்து, நம் உள்ளத்தில் வரவேற்க அந்த குரலுக்கு செவிசாய்ப்பதே இன்று நமது நோக்கம். கடவுளின் மீட்பை பெத்லகேமின் எளிய தொட்டிலில் காண, இந்த திருவருகைக்காலத்தில் விசுவாச கண்களோடு தயாராவோம். நாம் இன்பம் தேடும் இந்நுகர்வு சமூகத்தில், இன்றியமையாத ஒரு வழியில் வாழ திருமுழுக்கு யோவான் நமக்கு கற்பிக்கிறார். அதன் மூலம், கிறிஸ்து பிறப்பை வெளிக் கொண்டாட்டமாக அன்றி, மக்களுக்கு அமைதியையும், வாழ்வையும், உண்மையான மகிழ்ச்சியையும் கொணர வரும் இறைமகனின் விழாவாக சிறப்பிக்க முடியும்.
   இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவான், ஆண்டவரின் மாட்சிமிகு வருகைக்காக காத்திருக்கும் நாம் அவரது வழியைத் தயார் செய்ய, மனம் வருந்தி தூய்மையாவதன் தேவையை நினைவூட்டுகிறார். ஒவ்வொரு கிறிஸ்தவரும் அவரது உண்மை வீடாகிய விண்ணகத்துக்கு செல்ல வேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது. அதற்கு இயேசுவே ஒரே வழி. உங்களையும், உங்களது அன்புக்குரியவர்களையும் கடவுள் நிறைவாக ஆசீர்வதிப்பாராக!