Sunday, December 16, 2012

டிசம்பர் 16, 2012

நமது நடத்தை கடவுளின் திருவுளத்தை பின்
தொடர்வதை நிரூபிக்க வேண்டும் - திருத்தந்தை

   புனித பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இந்த ஞாயிறு வழங்கப் பட்டுள்ள லூக்கா நற்செய்தியை மையப்படுத்தி தன் கருத்துகளை எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   திருவருகைக்காலத்தின் இஞ்ஞாயிறு நற்செய்தி, யோர்தான் நதியில் திருமுழுக்கு பெறச் சென்ற மக்களுக்கு போதித்த திரு முழுக்கு யோவானை நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறது. யோவா னின் அழுத்தமான வார்த்தைகள், மெசியாவின் வருகைக்காக ஒவ்வொருவரும் மனம்மாற அவசரப்படுத்தின. "நாங்கள் என்ன செய்யவேண்டும்?'' என்று சிலர் அவரிடம் கேட்டனர். குறித்த நேரத்தில் நிகழ்ந்த இந்த உரையாடல் மிகவும் சுவாரசியமானது.
   முதல் பதில் மக்கள் கூட்டத்துக்கு பொதுவாக வழங்கப்படுகிறது. திருமுழுக்காளர் கூறுகிறார்: "இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்துகொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்." பிறரன்போடு வாழும் நீதியின் சூழலை நாம் இங்கு காண முடிகிறது. தேவைக்கு அதிகமாக வைத்திருப்பவர்களுக் கும், பற்றாக்குறை உள்ளவர்களுக்கும் இடையில் உள்ள சமமின்மையை போக்க நீதி அழைப்பு விடுக்கிறது. ஒருவர் மற்றவர் மீது அக்கறை கொள்ளவும், அவர்களது தேவைகளை சந்திக்கவும் பிறரன்பு அவசரப்படுத்துகிறது. நீதியும் அன்பும் ஒன்றை ஒன்று எதிர்க்கவில்லை, மாறாக ஒன்றுக்கொன்று தேவையாகவும் உதவியாகவும் இருக்கின்றன. "மிகவும் நீதியுள்ள சமூகத்திலும், எப்பொழுதும் அன்பு தேவை. ஏனெ னில், உலக தேவைகளுக்கான சூழ்நிலைகளில், அடுத்திருப்பவரின் நிலையான அன்பு உதவி இன்றியமையாததாக உள்ளது."
   அடுத்தது இரண்டாவது பதிலை நோக்குவோம், அது உரோமையருக்காக வரி வசூலிப்பவர்களிடம் நம்மைத் திருப்புகிறது. வரி வசூலிப்பவர்கள் தங்கள் பதவியை கொள்ளையடிக்க பயன்படுத்தியதால் வெறுப்புடன் நோக்கப்பட்டார்கள். திருமுழுக்கா ளர் அவர்களிடம், வேறு எதைப் பற்றியும் பேசாமல் அவர்களின் பணிகளை மாற்றச் சொல்கிறார். கடவுளின் பெயரால் வந்த இறைவாக்கினர், விதிவிலக்கானவற்றை செய்யுமாறு கேட்கவில்லை, மாறாக அனைத்துக்கும் மேலாக கடமையை நேர்மை யாக நிறைவேற்றச் சொல்கிறார். நிலைவாழ்வை அடைவதற்கான முதல் படியாக எப்பொழுதும் கட்டளைகளை கடைபிடிக்க வேண்டும், இங்கு ஏழாம் கட்டளை: "களவு செய்யாதே."
   மூன்றாவது பதில் படைவீரர்களைப் பற்றியது, அதிகாரம் படைத்த மற்றொரு வகை யினர், அதை தவறாக பயன்படுத்த சோதனைக்கு ஆட்படுபவர்கள். படைவீரர்களிடம் யோவான் கூறுகிறார்: "நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார் மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள்." பிற ரிடம் நேர்மையாகவும் மரியாதையோடும் நடந்து கொள்வதில் ஒவ்வொருவரிடமும், குறிப்பாக அதிக பொறுப்பு உள்ளவர்களிடம் மீண்டும் மாற்றம் தொடங்க வேண்டும்.
   இந்த உரையாடல்களை முழுமையாக கவனித்தால், யோவானின் வார்த்தைகளில் உள்ள நிலைத்தன்மை புரியும்: கடவுள் நம் செயல்களுக்கு ஏற்ப நமக்கு தீர்ப்பு வழங் குவார் என்பதால், நமது நடத்தை அவரது திருவுளத்தை பின் தொடர்வதை நிரூபிக்க வேண்டும். திருமுழுக்காளரின் அடையாளங்கள் நமது சிக்கலான உலகின் இன்றைய நாளிலும் பொருந்தும், இந்த நடத்தை விதிகளை உள்வாங்கினால் அனைத்தும் சிறப் பாக அமையும். கிறிஸ்து பிறப்புக்கான தயாரிப்பு மனமாற்றத்தின் நற்கனிகளைத் தர, தூய மரியாவின் பரிந்துரை வழியாக ஆண்டவரை வேண்டுவோம்.
   இன்றைய மூவேளை செபத்துக்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் வாழ்த்து கிறேன். வெள்ளிக்கிழமை நியூட்டனில் நிகழ்ந்த அறிவற்ற வன்முறையால் நான் மிகவும் வருத்தமடைந்தேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு, குறிப்பாக குழந்தையை இழந்தவர்களுக்கு செபத்தின் வழியாக என் அருகாமையை உறுதி அளிக்கிறேன். ஆறுதலின் கடவுள் அவர்களது இதயத்தைத் தொட்டு, அவர்கள் வலி யைக் குறைப்பாராக! இந்த திருவருகைக்காலத்தில், நம்மை செபத்திலும், அமைதி பணிகளிலும் ஆர்வமுடன் அர்ப்பணிப்போம். இந்த துயர நிகழ்வால் பாதிக்கப்பட்டவர் கள் மீதும், உங்கள் ஒவ்வொருவர் மீதும், கடவுளின் நிறைவான ஆசீர் பொழியப்பட நான் வேண்டுகிறேன்!