Sunday, June 17, 2012

ஜூன் 17, 2012

நற்கருணை மறைபொருளில் இயேசு நம்மோடு
தங்கியிருக்க விரும்புகிறார் - திருத்தந்தை

   உரோம் தூய பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த ஏராளமான மக்களுக்கு மூவேளை செப உரை வழங் கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இஞ்ஞாயிறு நற் செய்தியில் இடம்பெற்றுள்ள கிறிஸ்துவின் உவமை களைப் பற்றி எடுத்துரைத்தார்.
   விதைத்தவர் ஓய்வில் இருக்கும்போதே தானாக முளைத்து வளரும் விதையின் உவமை, "படைப்பு மற்றும் மீட்பின் மறைபொருளை, வரலாற்றில் கடவு ளின் கனிதரும் பணியைக் குறிக்கிறது." இந்த உவ மையின் இறுதி அறுவடை, காலத்தின் முடிவில் அமையும் கடவுளின் அரசை முழுமையாக உணர நமக்கு நினைவூட்டுகிறது. தற் பொழுது விதைப்பின் நேரம், மேலும் விதையின் வளர்ச்சியை ஆண்டவர் உறுதி செய்கிறார். அனைத்து கிறிஸ்தவரும் தன்னால் முடிந்தவற்றை செய்ய வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும், ஆனால் இறுதி முடிவுகளோ கடவுளைச் சார்ந்தி ருக்கும். இந்த அறிவு அவரது அன்றாட பணிகளை, குறிப்பாக கடினமான சூழ்நிலை களில் தாங்கி நிற்கும். இன்றைய நற்செய்தியில் ஆண்டவர், இறையாட்சி என்பது எல்லாச் செடிகளையும் விடப் பெரிதாக வளரும் சிறிய கடுகு விதையைப் போன்றது என்று நமக்கு கற்பிக்கிறார். கடவுள் நமது பலவீனமும் உண்மையுமான ஆசைகளை, அவருக்கும் நமக்கு அடுத்திருப்போருக்குமான சிறந்த அன்பு பணிகளாக மாற்ற ஆர்வ முடன் செபிப்போம்.
   மூவேளை செபத்துக்கு பின் பேசிய திருத்தந்தை, ஜூன் 20ந்தேதி ஐ.நா.வால் அனு சரிக்கப்படும் உலக அகதிகள் தினத்தைப் பற்றி குறிப்பிட்டார். அகதிகளுக்கு தனது செபங்களையும் அக்கறையையும் உறுதி அளித்த அவர், அவர்களது உரிமைகள் மதிக் கப்படும் என்றும், அவர்கள் தங்கள் குடும்பங்களோடு விரைவில் இணைவார்கள் என் றும் நம்பிக்கை தெரிவித்தார். அயர்லாந்தில் நடைபெற்ற நற்கருணை மாநாடு இன்று நிறைவு பெறுவதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, "நாம் கடவுளோடும் நமக்கிடை யிலும் ஒன்றித்திருக்க வேண்டுமென்பதற்காக, நற்கருணை மறைபொருளில் இயேசு நம்மோடு தங்கியிருக்க விரும்புகிறார்" என்று கூறினார். இறுதியில் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.